பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
தென் சென்னையின் பிரபல ஏ+ கேட்டகிரி ரவுடியான CD மணியை சேலத்தில் வைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கொலை,கொள்ளை உட்பட 32 வழக்குகள் உள்ள CD மணி, டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்ட்டர் செய்யப்பட்டபிறகே, அவரது நெருங்கிய நண்பரான CD மணி இருப்பிடம் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
திருந்தி வாழும் தனது மகனை போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள குடும்பத்தினர், CD மணிக்கு பாதுகாப்பு கேட்டு மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
Comments