தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே, காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சின்ன மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரவேலன், அவரது 15 வயது மகன் லோகேஷ் உள்பட 3 பேர் இரவில் விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றபோது, அங்குள்ள விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments