தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
சென்னை வேளச்சேரியில் போலியான பட்டாவை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக அதிமுக பிரமுகர், அவரது மனைவி, உடந்தையாக இருந்த அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் படி அரசால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 200 சதுர அடி கொண்ட அந்த நிலத்தின் அசல் ஆவணங்களை அழித்து, வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளரான எம்.ஏ மூர்த்தி அவரது மனைவி சுதா ஆகியோர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் எம்.ஏ.மூர்த்தி, சுதா, அப்போதைய வட்டாட்சியர் மணிசேகர், அப்போதைய வேளச்சேரி நில அளவை துணை ஆய்வாளர் லோகநாதன 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments