தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

0 401

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர் மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6ஆம் தேதி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், து.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், பெயர் குழப்பம் காரணமாக தவறான செய்தி வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments