ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
நெல்லை மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகங்களில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார்.
2 வாரங்களுக்கு முன் பாஜக நிர்வாகி ரூபிநாத் என்பவருடன் நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்ற மங்கையர்க்கரசி என்ற அந்தப் பெண், தனது நண்பர் பெயருக்கு துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதே ஜோடி நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகம் சென்று பண மோசடி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் மங்கையர்க்கரசி உண்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரையும் ரூபிநாத்தையும் போலீசார் கைது செய்தனர்.
Comments