நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா
கடலூர் மாவட்ட நெய்வேலி என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகம் போனஸ் வழங்கப்படுவதாகக் கூறி தங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் செல்ஃபோன்ஃப்ளாஷ் லைட்டை அடித்து போராட்டம் நடத்தினர்.
தற்போது 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் நிலையில் கூடுதல் போனஸ் கேட்டு ஒப்பந்த தொழிலாளர்களும் சொசைட்டி தொழிலாளர்களும் நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Comments