தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
"கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் கப்பம் கட்ட வேண்டும்" மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை கைது செய்த போலீஸ்
சென்னை திருவொற்றியூர் அருகே பிரபல வணிக வளாகமான டி-மார்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக ஆறு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
எண்ணூர் விரைவுச்சாலை அருகே டி- மார்ட் வணிக வளாக கட்டுமான பணிகளை மோகன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கட்டி வரும் நிலையில், அங்கு வந்த ரவுடிகள் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் மாதாமாதம் கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
திருவொற்றியூரைச் சேர்ந்த 11 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கேட் கார்த்திக், ஏழு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜி இவர்களது கூட்டாளிகள் ராஜா, சபீர் அகமது, லோகேஷ் மற்றும் விஜயகுமார் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.
Comments