கடிதம் எழுதிவைத்துவிட்டு ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன..?

0 2223

உணவு டெலிவரி செய்த வீட்டின்பெண்ணை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்துவிட்டு ஸ்விகி டெலிவரி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரன்என்ற இளைஞர் கடந்த 11 ம் தேதி கொரட்டூர் மோகன் கார்டன் பகுதிக்கு உணவு டெலிவரி செய்யச் சென்றபோது தாமதமானதால், ஆர்டர் செய்த பெண் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் அந்தப் பெண்ணின் வீட்டு கண்ணாடியை உடைத்ததால், கொரட்டூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி அபராதம் விதித்ததனர். இதற்கு பிறகு  இதுபோன்ற பெண் உலகத்தில் உள்ளவரை பல மரணங்கள் நிகழும் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments