செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

0 805

திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதாக மாட்டிக் கொண்ட 2 திருடர்களுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி தான் இது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் ரியானா என்ற பெண் வந்தவாசி செல்வதற்காக கணவருடன்பேருந்துக்காக காத்திருந்தார். அவருக்கு அருகில் ஈரோட்டைச் சேர்ந்த தியாகராஜன்மற்றும் தாழவேடைச் சேர்ந்த கொல்லாபுரி ஆகியோரும் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அங்கு வந்த 2 பேர் திடீரென 3 பேரிடமும் செல்ஃபோனை பறித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையாக ஓடினர்.

பேருந்து நிலையத்திலிருந்த மற்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டு திருடர்களை துரத்தினர்.
கழிவறைக்குள் சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டு வெளியே வர மறுத்து அடம் பிடித்தான்திருடன். சுற்றி வளைத்த பொதுமக்கள் அவனை வெளியே வருமாறு அழைக்க, அங்கிருந்த ஒருவர் வாளியில் தண்ணீரை பிடித்து வெளியே இருந்து உள்ளே ஊற்றினார்.

வேறு வழியில்லாமல் வெளியே வந்தவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே ஓடிய மற்றொரு திருடனை திருத்தணி நகராட்சி அருகே துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர் பொதுமக்கள். அப்போது செல்ஃபோனை பறிகொடுத்த பெண் ஒருவரும் வந்து தனது பங்கிற்கு 4 அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 35 வயது சிவராம், ராஜமுந்திரியைச் சேர்ந்த 15 வயது சிறுவன்என தெரிவித்தனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments