எனது மகன்கள் மீதான தாக்குதல் குறித்த புதிய சிசிடிவி காட்சி மூலம் உண்மை வெளிவந்துள்ளது: பாடகர் மனோவின் மனைவி

0 1029

தனது மகன்கள் மீதான தாக்குதல் குறித்த புதிய சிசிடிவி காட்சி மூலம் உண்மை வெளிவந்துள்ளதாகவும் உண்மை தெரியாமல் தனது மகன்களை அசிங்கப்படுத்திவிட்டனர் என்றும் பாடகர் மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார்.

புதிய சிசிடிவி காட்சியில், பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக்கை 4 இருசக்கர வாகனங்களில் வந்த 16 வயது சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கல், கட்டையால் கண்மூடித் தனமாக தாக்குகின்றனர்.

அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பின்னரே ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் ஜமீலா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments