மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!

0 1075

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசியது குறித்த வீடியோ பேசுபொருளாகியுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார்.

அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் யாருமின்றி முதலமைச்சரும், திருமாவளவனும் சிறிது நேரம் தனியே சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் பேட்டியளித்த திருமாவளவன், மது விலக்கு தொடர்பாக கோரிக்கை மனு வழங்கிய தம்மிடம், மதுவிலக்கு தி.மு.க.வின் கொள்கை தான் என்றும் நிர்வாக சிக்கலை கவனத்தில் கொண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்ததாக கூறினார்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அதனை யாரும் திசைதிருப்ப வேண்டாம் என்றும் திருமாவளவன் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. போட்டியிடுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் உள்ளதால், நேரம் வரும் போது அது குறித்து சொல்வதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments