மொபட்டில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்து..பெண் மீது கார் ஏற்றிய இளைஞர் - மதுபோதையில் கொடூரம்..!
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாலையை கடக்க முயன்ற மொபட் மீது மோதி கீழே விழுந்த பெண் மீது காரை ஏற்றிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குஞ்ஞுமோள் என்ற பெண் தனது தோழியுடன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தலைக்கவசம் அணியாமல் மொபட்டில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் குஞ்ஞுமோள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரின் முன் சக்கரப் பகுதியில் குஞ்ஞுமோள் சிக்கிக்கொண்ட நிலையில் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் பெண் மீது ஏற்றிச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விசாரணையில், காரை அஜ்மல் என்பவர் ஓட்டிச் சென்றதாகவும் உடன் அவரது தோழி, மருத்துவர் ஸ்ரீகுட்டி பயணித்த நிலையில் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Comments