தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதானவர் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான 57 வயதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் விவேகானந்தனும், கருணாஸ் என்ற இளைஞரும் கடந்த மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று இரவு தனக்கு குளிர் அடிப்பதாகக்கூறி காவலரிடம் விவேகானந்தன் துண்டு வாங்கியதாகவும், அந்த துண்டை வைத்து இன்று காலை கழிவறையில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments