இயற்கை விவசாயம் மூலம் பயிரிடப்பட்ட ஆர்கானிக் உழவர் சந்தை கண்காட்சி..
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் நடைபெற்றுவரும் ஆர்கானிக் உழவர் சந்தை கண்காட்சியை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக கண்காட்சி நடத்தப்பட்டது.
தாழம்பூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் இங்கிலாந்து நாட்டு தம்பதியினர் இரசாயன உரங்கள் கலக்காமல் பயிரிடப்பட்ட கீரைகள் மற்றும் தாவரங்களை வைத்து தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
Comments