கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்.. இடம் பிடிக்க போட்டி..!
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் முன் பதிவு செய்யாத பயணிகள் குடும்பத்துடன் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Comments