பால் கறக்க சென்ற பெண்ணை முட்டிய காளை மாடு.. 7 இடங்களில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு

0 564

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சாந்தி, வழக்கம்போல வீட்டின் அருகில் உள்ள தங்களது மாட்டு பண்ணையில் பால் கறக்க சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் வளர்க்கக் கூடிய காளைமாடு ஒன்று சாந்தியை பலமாக முட்டி தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் நீண்ட நேரம் வராததால் அப்பகுதி மக்களே  காளை மாட்டை பத்திரமாக பிடித்து கட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments