தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சிவகங்கை அருகே பெற்றோர்கள் பல்வேறு குற்றம்சாட்டிய நிலையில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொம்புகாரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர்களிடையே பாகுபாடு பார்ப்பதாகவும், பள்ளி மேலாண்மை குழு தேர்தலை வெளிப்படையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது கண்டிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை ஒருவர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தண்ணாயிரமூர்த்தியை சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Comments