சிவபெருமான் சாதிபாகுபாடு பார்த்தாரா ? “நந்தன்” சர்ச்சையை பற்றவைத்த சீமான்

0 1007

சென்னையில் நடந்த நந்தன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நந்தனுக்காக நந்தியை சிவன் நகர்த்தி வைத்ததாக நந்தனார் வரலாற்றில் கூறப்படும் நிலையில், நந்தனை ஏன் சிவன் கருவறைக்குள் அழைக்க வில்லை என்றும் சிவனும் சாதிபாகுபாடு பார்த்தரா ? என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பி உள்ளார்

 

சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள நந்தன் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். நந்தனார் சரித்திரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தணுக்கு சிவன் தெரியாமல் நந்தி சிவனை மறைகின்றது, அதை பார்த்த சிவன் நந்தியை நகர்த்தி வைத்தான் என்பது வரலாறு.. என்று கூறிய சீமான், நந்தியை நகர்த்தி வைத்த சிவன், நந்தா உள்ளே வாடா என்று ஏன் கூப்பிடவில்லை.. அப்போ இறைவனுக்கும் தீண்டாமை இருந்ததா.? சிவனும் சாதிய பாகுபாடு பார்த்தாயா.? என்ற கேள்வி தான் தொடரும் என்றார்

 

பாரதி எப்படி சீமானுக்கு பாட்டன் ஆகிறான் என்று தன்னை பார்த்து கேட்பவர்களுக்கும் சீமான் விளக்கம் அளித்தார்

இளையராஜா மற்றும் கமலஹாசனின் சாதி குறித்தும் சீமான் சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments