தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சல்... அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் லேசான காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, ஏடிஎஸ் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments