ஒலிம்பிக்கா நடத்துறீங்க..?..40 கிலோவுக்கு குறைவா இருந்தா சிலம்பம் சுற்ற விடமாட்டீங்களா..? - நடுவர்களை சுத்துப்போட்ட பெற்றோர்..!

0 747

திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோவுக்கு குறைவாக உள்ள மாணவ மாணவிகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று நடுவர்கள் புதிய  நிபந்தனை விதித்ததால் , நடுவர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

உடல் எடை குறைவாக இருப்பதாக கூறி சிலம்பாட்ட போட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் மாஸ்டர்கள் நடுவருடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!

திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சதுரங்கம் கைப்பந்து, குத்துச்சண்டை ,வாலிபால், கபடி, இறகு பந்து உள்ளிட்ட 15 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் , இந்த ஆண்டு புதிதாக சிலம்பாட்ட போட்டியும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் மா நிலம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் போட்டிக்கு கையில் சிலம்பு குச்சியுடன் வந்திருந்தனர்.

சிலம்பப் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கில் பெயர் கொடுத்த நிலையில், நாற்பது கிலோவிற்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதி என ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி அதிகாரிகள் கூறியதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . மாணவ மாணவிகளை அழைத்து வந்த பயிற்சியாளர்கள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்

பயிற்சியாளர்கள் சீன் போடுவதாக நடுவர் தெரிவித்ததால், மாணவிகளின் பெற்றோர்கள் போட்டி நடத்தும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ் நிலை உருவானதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், இது என்ன ஒலிம்பிக்கா நடத்துறீங்க, உலகத்துல்ல இல்லாத விதி முறைகளை எல்லாம் சொல்லி கிராமப்புற மாணவர்களை முடக்க பார்க்கிறீர்கள் ? என்று எதிர்ப்புக்குரல் வலித்ததால், நாற்பது கிலோ எடைக்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளும் சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்கலாம் என்ரு அனுமதி வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments