தலைவர்கள் தான் மேலே ஏறனும் தொண்டர்களை கீழே தள்ளியதால் பரமகுடியில் அடிதடி ரகளை சேர் வீச்சு.. லத்தியால் அடித்து விரட்டிய போலீசார்..!

0 778

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்தச்சென்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்னிலையில் அவரது ஆதரவாளர்களை நினைவிடத்தில் இருந்தவர்கள் கீழே பிடித்து தள்ளியதால் உண்டான மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். 

தியாகி இம்மானுவேல் சேகரனின் 67 வது குருபூஜையையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலில் செலுத்தினர். 

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் இருவரும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வந்தனர். இருவரையும் நினைவிடத்திற்கு மேலே ஏறி அஞ்சலி செலுத்த அனுமதித்த தேவேந்திரகுல பண்பாட்டுக் கழகத்தினர் , டாக்டர் கிருஷ்ணசாமி உடன் வந்திருந்த மற்றொரு நபரை அனுமதிக்கவில்லை. அதையும் மீறி மேலே ஏறி வந்தவரை இழுத்து கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களுக்கும் தேவேந்திரகுல பண்பாட்டு கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் பிளாஸ்டிக் சேர்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அதற்குள்ளாக நினைவிடத்தில் இருந்து இறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, காவல்துறையினரை பார்த்து கையசைத்து அமைதிப்படுத்தினார் , இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments