அமைச்சர் உதயநிதியிடம் தவறான தகவலை சொன்ன அதிகாரி சஸ்பெண்ட்..!

0 1108

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்ததாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசன் பணிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தங்கள் பகுதியில் மண்டிக் கிடக்கும் புதரை அகற்ற கோரி ஒருவர் அளித்திருந்த மனு குறித்து அமைச்சர் கேட்டபோது, அதனை சுத்தப்படுத்திவிட்டதாக சோமநாதன் பதில் அளித்துள்ளார். ஆனால், விசாரணையில் அது பொய் என்பது தெரியவந்ததை அடுத்து சோமநாதன் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments