மரத்தில் டூவீலர் மோதி கண் முன்னே நண்பர் உயிரிழந்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வயதான ஷியாம் நிஜானந்த் ஒரு டூவீலரிலும், மற்றொரு டூவீலரில் அவரது தம்பி ஷ்யாம் நிவேதனும் மற்றும் நண்பர் ஆனந்தராஜ் ஆகியோர் கோம்பையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இரவு 12 மணியளவில் கருகோடை பகுதியில் சிறிய வளைவில் திரும்பும் போது சாலையோரம் இருந்த மரத்தில் டூவீலர் மோதியதில் காயமடைந்த நிஜானந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தராஜ் விபத்து நடந்த பகுதிக்கு அதிகாலை 3 மணிக்குச் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments