ஈரோட்டில் கடன் பிரச்சனையால் சொந்த தம்பியின் வீட்டிலேயே ரூ.3 லட்சம் திருடி நாடகமாடிய சகோதரி கைது

0 554

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடன் பிரச்சனையை தீர்க்க தனது சொந்த தம்பியின் வீட்டிலேயே 3 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, முகமூடி அணிந்த மூன்று நபர்கள்  வந்து கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய அக்காவை போலீசார் கைது செய்தனர்.

அர்த்தநாரிப்பாளையத்தில் வசிக்கும் கோகுலகிருஷ்ணனின் வீட்டிற்குள் வந்த கொள்ளையர்கள் தன்னையும், நடக்க முடியாத தனது தந்தையையும் கட்டிப்போட்டு விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக அவரது அக்கா ரம்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் வந்ததற்கான எந்த தடயமும் சிசிடிவிகளில் பதிவாகவில்லை என்பதும், ரம்யாவின் வங்கிக் கணக்கிலிருந்து 3 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ரம்யா குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments