தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள பொருட்களை காலி செய்ய, 14 நாட்கள் அவகாசம் வழங்கிய தமிழ்நாடு அரசு
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள பொருட்களை காலி செய்ய, 14 நாட்கள் அவகாசம் வழங்கி, வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரேஸ்கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் குத்தகையை ரத்து செய்து, நிலத்தை தமிழ்நாடு அரசு சுவாதீனம் எடுத்தது. உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை என ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து, அங்குள்ள அசையும் பொருட்களை 14 நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் இதர கட்டமைப்புகளுக்கான இழப்பீட்டையும் 30 நாட்களுக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments