ராமர் குளத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது குளத்தில் மூழ்கி ஒரு சிறுவன் பலி..

0 852

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றதில், குளத்தில் மூழ்கிய 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி முடிந்து 3ஆம் நாளான இன்று நத்தம் ராமர் குளத்தில் விநாயகர் சிலையை கரைக்க நீரில் இறங்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

சிறுவர்களின் கதறல் சத்தத்தை கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர். அப்போது மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஆதிகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாத சிறுவர்கள் நீர்நிலையில் இறங்க அனுமதித்தே இத்தகைய விபரீதத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments