காஷ்மீர் நன்மைக்காகவே 370-வது சட்டப்பிரிவு நீக்கம்... எந்த சக்தியாலும் மீண்டும் கொண்டுவர முடியாது: ராஜ்நாத் சிங்

0 535

காஷ்மீரின் நன்மைக்காகவே 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும், எந்தச் சக்தியாலும் மீண்டும் அமல்படுத்த முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், 370-வது சட்டப்பிரிவை நீக்கினால் ரத்தக்களறி ஏற்படும் என பலரும் கூறிவந்த நிலையில் ஒரு துப்பாக்கிக் குண்டுகூட சுடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் பத்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால், நெம்பர் ஒன் மாநிலமாக மாறும் என்றும், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தற்போது சுற்றுலாத் தலமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாகவே முன்வந்து இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பார்கள் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments