கெட்டுப்போன சப்பாத்தியை பார்சல் வழங்கிய உணவகம்.. களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை..!

0 618

ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். காந்திஜி சாலையில் பாலு என்பவருக்கு சொந்தமான கருப்பண்ணா உணவகத்தில் ஸ்ரீகாந்த் என்பவர்,  தனது 2 வயது மகன் ஆசையாக கேட்ட சப்பாத்தியை பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

அதனை மகன் சாப்பிடும் போது கெட்டு போய் துர்நாற்றம் வீசியதால், உடனடியாக உணவகத்திற்கு சென்று ஸ்ரீகாந்த் முறையிட்டுள்ளார். உணவக உரிமையாளர் வெளியூர் சென்றதாக கூறி, ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் உணவகத்தை மூடி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இது பற்றி அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த சூரம்பட்டி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments