பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!

0 549

ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்முவில் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, ஜம்மு-காஷ்மீரில் இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் இன்றி, ஒரே கொடி மற்றும் ஒரு அரசியலமைப்பின் கீழ் தேர்தல் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், அப்பகுதியை மீண்டும் பயங்கரவாதத்தின் பிடியில் தள்ளுவதையே எதிர்க்கட்சியினர் விரும்புவதாகவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments