பெட்ரோல் பங்கில் தகராறு.. சட்டக்கல்லூரி மாணவருக்கு வெட்டு - தஞ்சாவூரில் பரபரப்பு சம்பவம்..!

0 562

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதி பெட்ரோல் பங்க்கில், ஏற்கனவே வரிசையில் நின்றிருந்தவர்களை முந்தி வந்த வாகன ஓட்டியான பாலசுப்பிரமணியத்தை, பெண் ஊழியர் செல்வராணி கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், செல்வராணி உடனே தனது கணவர் அலெக்ஸாண்டருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

அதேபோல், பாலசுப்பிரமணியம் சட்டம் படித்ததுவரும் தனது மகன்ஹரிஹரனை வரவழைத்துள்ளார். பெட்ரோல் பங்கிற்கு வந்த இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில், ஹரிஹரன் அலெக்ஸாண்டரைப் பிடித்து தள்ளியதாகவும், அப்போது, அவர் தனது இடுப்பில் மறைத்து வைத்து இருந்த சிறிய வாளை எடுத்து ஹரிஹரனின் முதுகுப்பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உடன் இருந்தவர்கள் தலைத் தெறிக்க ஓட்டம் பிடித்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments