மோட்டிவேசனல் பேச்சால் பள்ளியில் உண்டான களேபரம்.. அரசு பள்ளி H.M டிரான்ஸ்பர் - பாவம் மிஸ்டர் பரம்பொருள்..!
சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளையும், பெண்களையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவுபடுத்தி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மனிதன் உடலில் கை, கால்கள் இல்லாமல் ஊனமாக பிறப்பது முந்தைய பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் தான் காரணம் என்று பேசியதால் பார்வையற்ற மாற்றுதிறனாளி ஆசிரியரால் எதிர்ப்புக்குள்ளான மோட்டிவேசனல் பேச்சாளர் மகா விஷ்ணு இவர் தான்..!
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பரம் பொருள் அறக்கட்டளை நிர்வாகியான யூடியூப்பர் மகாவிஷணுவை வரவேற்று அழைத்துச்சென்ற நிலையில், முன் கூட்டியே பள்ளி ஆசிரியைகளிடம், தான் எப்படி பேச வேண்டும்.. என்ன பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் தனது பேச்சால் மாணவிகளை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்தார் மாகாவிஷ்ணு அதே நாள் மாலை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்த சென்ற மகாவிஷ்ணு, மேடையில் ஏறியதும், தன் மனதுக்கு தோன்றியதை எல்லாம் ஆன்மீக கருத்தாக பேசியதால் உண்டானது சர்ச்சை. பாவம், புன்னியம் பற்றி பேசியபோது கை கால்கள்ஊனமாக பிறப்பது, பெண்கள் அழகில்லாமல் பிறப்பது எல்லாம் சென்ற பிறவியில் செய்த பாவம் என்று பேசினார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த பார்வையற்ற மாற்றுதிறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவர், மகாவிஷ்ணுவின் உரைக்கு எதிர்ப்புக்குரல் தெரிவித்தார், உடனடியாக அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.
மகாவிஷ்ணுவோ, அந்த ஆசிரியரிடம் தர்க்கம் செய்து தான் டிபேட்டுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆசிரியர்கள் அவரை சமாதானம் செய்தனர்.
அன்று நடந்த இந்த சம்பவம் யாருக்கும் தெரியாத நிலையில் தனது ஆதரவாளர்கள் மூலம் இதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்த மாகாவிஷ்ணு, அதனை அசோக் நகர் அரசு பள்ளி மாணவிகளின் வீடியோவுடன் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்தத நிலையில் அரசு பள்ளியில் எப்படி இப்படி பேசலாம் என்ற சர்ச்சை உருவானது.
Comments