மாணவியைக் கடித்து குதறிய தெருநாய் - திருத்தணியில் அதிர்ச்சி சம்பவம்..!
திருத்தணி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெளியே நின்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகரித்துள்ள நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments