தந்தையையும் தங்கையையும் வெட்டிக் கொன்ற இளைஞன்.. வி.ஏ.ஓ அலுவலகம் அருகே பட்டப்பகலில் நிகழ்ந்த சம்பவம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அருகே வி.ஏ.ஓ அலுவலத்தில் வைத்து, தந்தையையும் தங்கையையும் வெட்டிக் கொன்ற இளைஞன் போலீசில் சரணடைந்தான். கொட்டுகாரம்பட்டியைச் சேர்ந்த வரதன் என்பவருக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. 2 பெண், 2 ஆண் பிள்ளைகள் கொண்ட வரதன், அந்த நிலத்தை நால்வருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் சகோதரிகளுக்கு நிலத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என மூத்த மகனான லவகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலத்துக்கான அனுபவச் சான்று பெறுவதற்காக வரதனும் அவரது மகள்களில் ஒருவரான மணவள்ளியும் மூன்றம்பட்டி வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அரிவாளுடன் சென்ற லவகிருஷ்ணன், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு போலீசில் சரணடந்துள்ளார்.
Comments