குங்கும டப்பாவை விழுங்கி ஒரு வயது குழந்தை பலி.. உறவினர் வீட்டிற்கு வந்தபோது நிகழ்ந்த விபரீதம்..!

0 537

சிவகங்கை மாவட்டம் காளவாசல் பகுதியில் குங்கும டப்பாவை விழுங்கி ஒரு வயது  ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த அஞ்சல்துறை ஊழியர் சூரிய பிரகாஷ் தனது மனைவியின்சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகாளவாசல்  வந்த நிலையில் அவரது மனைவி குழந்தை தரண்தேவாவுக்கு  பவுடர் அடித்து, பொட்டு வைத்துள்ளார்.

அதன் பிறகு அவர்அடுப்படிக்கு சென்று விட்டு வந்த போது  குழந்தை அருகில் இருந்த குங்கும டப்பாவை விழுங்கியதைக் கண்டு அதை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் , குழந்தைக்கு மூச்சத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments