தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
பானிப்பூரி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த 2 பேர் கைது.. கடை உரிமையாளரின் மனைவி காயம்..!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பானிப்பூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிப்பூரி விற்பனை நடத்தி வரும் மன்மோகன் என்பவரின் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சதீஷ்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் மன்மோகனின் மனைவி ரீத்தா மற்றும் அவரது மகள்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
ரீத்தாவுக்கு கை, முகம், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், மன்மோகன் அளித்த புகாரில் இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments