கோடியக்கரையில் ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்கள்.. உள்ளே இருந்த பொருளை ஆய்வுக்கு அனுப்பிய போலீசாருக்கு அதிர்ச்சி..!
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ஆம் தேதி கரை ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வக சோதனை முடிவில் அவற்றில் 2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாகவும் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தனர்.
இந்த போதைப் பொருளை கடத்தியவர்களைக் குறித்து விசாரித்துவருவதாக வேதாரண்யம் கடலோர காவல் குழுமத் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Comments