மயிலாடுதுறையில் மனநல பாதிப்புக்கு லேகியம்... நூதன மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது

0 372

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தமங்கலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு லேகியம் கொடுத்து குணப்படுத்துவதாகக் கூறி, 84 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 மாதங்களில் சிறுமிக்குக் குணமாகிவிடும் எனக் கூறி, பெற்றோரிடம் பணம் வாங்கிச் சென்ற இருவரையும் புதுக்கோட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த மஞ்சுநாதன், அன்னப்பா என்ற அந்த இருவரும் ஊர் ஊராகச் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயாளிகளை லேகியம் கொடுத்து குணப்படுத்துவதாகக் கூறி, பணத்தைப் பெற்று தலைமறைவாகி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments