ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீறல்.. ஆதாரத்துடன் புகார் - உடனே காவலர் சஸ்பெண்ட்..!

0 760

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தனியாக ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் காவலர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த 20 வயது பெண் மென்பொறியாளர் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி ரயில் நிலையத்தில் காத்திருந்த போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் அத்துமீறியது குறித்து வீடியோ ஆதாரத்தோடு ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.

விசாரணையில், வீடியோ பதிவில் இருந்தவர் சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றபிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. முன்ஜாமீன் பெற்றிருப்பதால் கமலக்கண்ணன் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments