வேகமாகச் சென்ற கார்.. கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து - மாமியார், மருமகள் பலி..!
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே வேகமாகச் சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் மாமியார் மற்றும் மருமகள் உயிரிழந்தனர். காங்கேயத்தைச் சேர்ந்த மதிவாணன் தனது மகனின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு குடும்பத்துடன் காரில் தாராபுரம் நோக்கி வேகமாகச் சென்றபோது குட்டையகாடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது.
இதில் மதிவாணன், அவரது மனைவி ராகவி, தாயார் பாக்கியலட்சுமி,குழந்தை ஆதிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ராகவி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
Comments