நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சமயபுரம் சுங்கச் சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு..!
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது எஞ்சிய 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி, கொடை ரோடு, மணவாசி, மேட்டுப்பட்டி, உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சமயபுரம் சுங்கச் சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் காருக்கு 5 ரூபாயும், எல் சிவி வாகனங்களுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு 15 ரூபாயும் உயர் கனரக வாகனங்களுக்கு 25 ரூபாயும் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments