மனைவியை கொலை செய்த கணவன்..எஸ்.ஐ.யுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக பகீர் வாக்குமூலம்..!

0 688

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக காவல் உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு மனைவியை கொன்று விட்டு தலைமறைவான அசோக் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவி திருக்கோவிலூரில் காவல் உதவி ஆய்வாளராக இருந்த நந்தகோபால் மற்றும் காவலர் பிரபாகரனுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி விசாரணை மேற்கொண்டதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments