காரின் பின் மோதிய டிப்பர் லாரி.. இழப்பீடு தருவதாக கூறி தப்ப முயற்சி - 3 கீ.மீட்டர் துரத்தி ஓட்டுநரை பிடித்த சம்பவம்..!

0 472

திருச்சியில் நேற்றிரவு காரின் பின்புறம் மோதிய டிப்பர் லாரி, காரின் சேதத்திற்கு இழப்பீடு தருவதாக கூறி,  லாரியுடன் தப்பியோட முயன்ற ஓட்டுநரை மடக்கி பிடித்தனர். 

டோல்கேட் பகுதியில் சிலம்பரசனின் காரை தினேஷ் என்பவர் ஓட்டி சென்ற போது, பின்னால் மண்பாரம் ஏற்றி வேகமாக வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த நண்பர்கள் மூவரும் காயமின்றி உயிர்தப்பினர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுநர் அறிவழகனிடம் சாவியை வாங்கிய தினேஷ், இழப்பீடு வழங்கிய பிறகு தருவதாக கூறி அனுப்பியுள்ளார். 

லாரியை அங்கு விட்டு சென்ற ஓட்டுநர் அறிவழகன், யாருக்கும் தெரியாமல் காலையில் கள்ளச்சாவி கொண்டு லாரியை எடுத்து சென்றுள்ளார். இதனை பார்த்த சிலம்பரசன், பைக்கில்  3 கிலோ மீட்டர் துரத்தி சென்று முத்தரசநல்லூர் அருகே லாரியை  மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments