நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஒன் வேயில் வந்த பைக்குகள்.. காரை கட்டுப்படுத்த முடியாமல் இடித்து தூக்கிய டிரைவர் - இருவர் பலி, 5 பேர் படுகாயம்..!
பொள்ளாச்சியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில், கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒன்வேயில் எதிரே வந்த பைக்குகளை கண்ட கார் ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அடுத்தடுத்து 3 பைக்குகள் மீது மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.
கோவை விமான நிலையத்திலிருந்து திரும்பிய தீபாலப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி தனது டாடா டியாகோ காரில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. முதல் 2 பைக்குகள் மீது மோதி கார் கவிழ்ந்ததில், பைக்கில் வந்த பழனிச்சாமி, குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.
கார் ஓட்டுநர் உட்பட பைக்கில் வந்த 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments