கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

0 856

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க கூகுள் நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் எதிர்காலத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments