ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் புதூர் அப்புவின் கூட்டாளி கைது..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூரூவில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜாவுக்கு எதிராக 2 கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த போலீசார், ரவுடி புதூர் அப்புவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ள ராஜாவிடம் அப்புவின் இருப்பிடம் குறித்து விசாரித்துவருவதாகவும் கூறியுள்ளனர்.
Comments