மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

0 466

கல்லூரியை கட் அடித்துவிட்டு மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்துவரும் 17 மாணவர்கள் நேற்று 9 பைக்குகளில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, அனைவரும் கடலில் குளித்தபோது 3 பேர் ராட்சத அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர். சடலமாக கரை ஒதுங்கிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments