சட்டவிரோத வேலை செய்யும் திமுகவினரை காக்க வேணுமாம்..! அமைச்சரிடம் திடீர் கோரிக்கை..! கட்சியினருக்கு மட்டுமே அரசு வேலையாம்..!

0 852

கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் , திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள் எனவும் இல்லீகலாக நடக்கும் திமுகவினரை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து சர்ச்சையை கிளப்பி உள்ளார்

கிருஷ்ணகிரியில் தி.மு.க., கிழக்கு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி தலைமையில் நடந்தது. தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான, செங்குட்டுவன், தான் மாவட்ட செயலாளராக இருந்த பொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு 900 அரசு பணிகளை திமுக தொண்டர்களுக்கு மட்டுமே வழங்கியதாகவும், ஆனால் தற்பொழுது அதிமுக கவுன்சிலரின் மகனுக்கெல்லாம் அரசு பணி வழங்கப்படுகிறது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார் ?

நமது கட்சிக்காரர்கள் எல்லாம் லீகலாகவே செய்ய வேண்டுமென எதிர்பாக்காதீர்கள் என்ற செங்குட்டுவன், இல்லீகள் செயல்களும் நடக்கும் அவனை காப்பாற்ற வேண்டும், அதற்காக தி.மு.க.,வினரை விட்டுவிட முடியுமா, இல்லீகல் ஓட்டு வேண்டாமென சொல்லிவிடுவோமா, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தமிழக அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் முதல்வர் ஆணைப்படி மட்டுமே நடப்பேன். சட்டம் தான் முக்கியம் எனக்கூறி சமாளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments