பில்லி, சூனிய கதை சொல்லி தாலியைத் திருடி கம்பி நீட்டிய பெண்... வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார்..!

0 499

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரில் பில்லி சூனியம் நீக்குவதாகக் கூறி 7 சவரன் தாலியை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

நோய் வாய்ப்பட்டிருந்த ஜேசு பிரபா என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற குறி சொல்லும் பெண் ஒருவர், உடல் நலக் குறைவுக்கு பில்லி சூனியம் காரணம் என்று கூறி பரிகாரம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது.

பூஜையின் போது தாலி அணியக் கூடாது என அப்பெண் கூறியதன் பேரில், தாலியைக் கழற்றி அருகிலிருந்த டேபிள் மீது ஜேசு பிரபா வைத்ததாகவும், ஜேசு பிரபா உள்ளே சென்ற வேளையில் தாலியை திருடிக் கொண்டு குறி சொல்லும் பெண் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஜேசு பிரபாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் பதுங்கி இருந்த தேவி லட்சுமி என்ற குறி சொல்லும் பெண்ணைக் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments