ஊராட்சி மன்றத்தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து - மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
வேலூர் மாவட்டம் சீவூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமாபதி மற்றும் துணைத்தலைவர் அஜிஸ் ஆகியோர் ஊராட்சி வங்கி கணக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிகவை சேர்ந்த உமாபதிக்கும் திமுகவை சேர்ந்த அஜிஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஊராட்சியின் திட்டப் பணிகள் முடங்கியதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர், அத்தியாவசிய நிர்வாக பணிகளுக்காக ஊராட்சியின் வங்கி கணக்குகளை கையாள குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
Comments