கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.4 தொடக்கம்..!

0 220

கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விருப்பக் கல்லூரிகள் குறித்து செப்டம்பர் 4 முதல் 7ஆம் தேதி வரை இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும், இடஒதுக்கீட்டுக்கான கடிதம் செப்டம்பர் 11ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி அண்ணா கலை அரங்கில் காலை 9 மணி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments